செய்திகள்

'கோமாளி'யான ஜெயம் ரவி! ஏன் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி.

சினேகா

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 விதமான கெட்டப்புக்களில் தோன்றுகிறார். ஆதிவாசி, ஐடி இளைஞர்ன், அடிமை உள்ளிட்ட தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். ஒரு கெட்டப் ஜோக்கராக இருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படத்தின் டைட்டிலை சமீபத்தில் வெளியிட்ட படக்குழுவினர் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

ஜெயம் ரவி தனது ட்விட்டரில் இந்த போஸ்டரை பதிவிட்டுள்ளார். படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை இந்த போஸ்டர் உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT