இந்நாள் சூப்பர் ஸ்டாரைவிட அதிக சம்பளம் கேட்கும் முன்னாள் சூப்பர் ஸ்டார்!
தென்னிந்திய திரைப்படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக தற்போதைய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருந்து வருகிறார்.
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:26 PM
தென்னிந்திய திரைப்படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக தற்போதைய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருந்து வருகிறார். அவர் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சுமார் ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம் கேட்டதாக டோலிவுட் வட்டாரஙக்ள் தெரிவிக்கின்றன.