செய்திகள்

சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!

சுத்தமான தமிழ்ப் படமான கசட தபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில்...

எழில்

இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்பு தேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் கசட தபற என்கிற படத்தை இயக்கியுள்ளார்.     

இந்நிலையில் இப்படத்துக்கு ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். இதற்கான அறிவிப்பை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் அறிவித்துள்ளார்.

என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான கசட தபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். இந்தப் படம் மிக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், ஜிப்ரான், சீன் ரால்டன், பிரேம்ஜி என ஆறு இசையமைப்பாளர்கள் கசட தபற படத்துக்கு இசையமைத்துள்ளார்கள்.

மேலும் இந்தப் படத்துக்கு ஆறு ஒளிப்பதிவாளர்களும் ஆறு படத்தொகுப்பாளர்களும் பணியாற்றியுள்ளார்கள். ஒளிப்பதிவாளர்கள் - எம்.எஸ். பிரபு, பாலசுப்ரமணியம், விஜய் மில்டன், ஆர்டி ராஜசேகர், எஸ்.ஆர். கதிர், சக்தி சரவணன். படத்தொகுப்பாளர்கள் - ஆண்டனி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, பிரவீன் கே.எல்., விவேக் ஹர்ஷன், ரூபன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

SCROLL FOR NEXT