செய்திகள்

மோடிக்கு எதிராக இதைச் செய்கிறீர்களா?: ‘நேசமணி’ டிரெண்டிங் குறித்து காயத்ரி ரகுராம் ஆவேசம்!

மக்களிடம் இது எடுபடவில்லை. இந்த நகைச்சுவை வடிவேல் சாருக்கானது. அவருக்கு மட்டும்தான்....

எழில்

சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் டங் டங் எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய ‘சம்பவத்தின்’ தொடக்கமாக அந்த உரையாடல் அமைந்தது.

இதையடுத்து ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே  #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. உடனே இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விஷயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன. இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, அடுத்ததாக உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை எழுதினார்கள். இதன் விளைவாக, மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பது குறித்த #ModiSarkar2 என்கிற ட்விட்டர் ஹேஷ்டேக் முதலிடத்தை அடையமுடியாமல் இருந்தது.   

ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani டிரெண்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ரசிகர்களுடன் இணைந்து செய்தியாளர்கள் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் சென்னை சூப்பர் கிங்ஸ், நிப்பான் பெயிண்ட்ஸ், சோனி மியூசிக் செளத் போன்ற பிரபல நிறுவனங்களும் இதில் இணைந்துகொண்டதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் களைகட்டின. இப்படி நேற்றிரவு விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.

இந்நிலையில் நேசமணி டிரெண்டிங் குறித்து பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியதாவது:

மிகச்சிறந்த நகைச்சுவைக் காட்சி தேவையில்லாமல் மீம், ஹேஷ்டேக் ஆக மாறியுள்ளது. #Pray_for_Neasamani என்பது தேவையில்லாத டிரெண்டிங். நம்முடைய நக்கலாலும் வெட்டித்தனத்தாலும் முட்டாளாகத் தெரியப்போகிறோம். மோடிக்கு எதிராக இதை நீங்கள் செய்தால் முட்டாள்தனமான யோசனை. நம்மைக் கீழிறக்கி முட்டாளாக நடந்துகொள்ள வைக்கும். உலக மக்கள் நமக்கு மூளையில்லை என எண்ணுவார்கள். முக்கியமாக, அந்தக் காட்சியின் நகைச்சுவையை ரசிகர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் இது இப்படியாகியுள்ளது. முட்டாள்தனமானது. போலியான போராளிகளைக் கண்டு கவலைப்படுகிறேன். நீங்கள் முட்டாளாக நடந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் முட்டாள்கள் அல்லர். முட்டாள்தனமான ஹேஷ்டேக்குகள், மீம்களுக்காக காங்கிரஸ் நிறைய பணம் செலவழித்து மீண்டும் தோற்பதற்காக முயல்கிறது. இதே காரணத்துக்காகத்தான் இந்தியா முழுக்க காங்கிரஸ் தோற்றுள்ளது. மீம் தயாரிப்பவர்களைக் கண்டால் பாவமாக உள்ளது. மக்களிடம் இது எடுபடவில்லை. இந்த நகைச்சுவை வடிவேல் சாருக்கானது. அவருக்கு மட்டும்தான். அதை நீங்கள் மீமாக மாற்றும்போது பத்தலை பத்தலை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT