Joshua first look poster 
செய்திகள்

புதிய பட ரிலீஸ் தேதியை அறிவித்த கெளதம் வாசுதேவ் மேனன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா.

சினேகா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது.

பலமுறை தாமதமான இப்படத்தின் வெளியீட்டுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 29 அன்று எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'எனை நோக்கி பாயும் தோட்டா', மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன் சத்தமில்லாமல் இன்னொரு படத்தையும் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் டைட்டில் ‘யோஹன்: அத்யாயம் ஒன்று’ என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்தப் படத்தில் டைட்டில் 'ஜோஷ்வா' என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஹய் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் வருண் ஐசரி கணேஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, அதாவது காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் குறித்த விவரங்கள் மற்றும் டீஸர் உள்ளிட்டவை பற்றி விரைவில் அறிவிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT