செய்திகள்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியீடு

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

இந்நிலையில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் போஸ்டரை கமல் ஹாசனும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் மலையாளத்தில் மோகன் லாலும் ஹிந்தியில் சல்மான் கானும் வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

SCROLL FOR NEXT