செய்திகள்

ஆதித்ய வர்மா படத்தின் வெளியீடு தள்ளிப் போகக் காரணம் என்ன?

தணிக்கைச் சான்றிதழ் காரணமாக எங்களுக்குப் பல வேலைகள் இருந்தன. அதனால் தான் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்துள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.

ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரு வாரங்கள் கழித்து, நவம்பர் 8 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் நவம்பர் 21 அன்று வெளியாகவுள்ளது. அதாவது நவம்பர் 15 அன்று விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படமும் விஷால் நடித்த ஆக்‌ஷன் படமும் வெளியாகவுள்ளன. இதற்குப் பிறகு ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ட்விட்டர் உரையாடல் ஒன்றில் படத் தயாரிப்பாளர் முகேஷ் ரதிலால் மேத்தா, படத்தின் வெளியீடு தள்ளிப் போனதற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: தணிக்கைச் சான்றிதழ் காரணமாக எங்களுக்குப் பல வேலைகள் இருந்தன. அதனால் தான் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. கடவுள் நமக்காக ஒரு திட்டத்தை வைத்திருப்பார் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். இந்தப் படத்துக்காக அனைவரும் நன்கு உழைத்துள்ளோம். துருவ் விக்ரம் பெரிய நடிகராக வருவார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT