சமந்தா 
செய்திகள்

இதுதான் சமந்தாவின் சமர்த்து நாய்க்குட்டி!

சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லப் பிராணியான ஹாஷ் என்ற நாய்க்குட்டியின் புகைப்படத்தை

ராக்கி

சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லப் பிராணியான ஹாஷ் என்ற நாய்க்குட்டியின் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு அது செய்த சேட்டைகளை ரசிகர்களிடம் சொல்லி மகிழ்வார். 

அவரது ரசிகர்களும் அதைப் பற்றிய கேள்விகளை அடிக்கடி அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வார்கள். சமந்தாவைப் போலவே அந்த ரசிகர்களும் ஹாஷ் மீது அன்பு மழை பொழிந்து வருகிறார்கள்.

சமந்தா ஹாஷின் புகைப்படம் பதிவேற்றாமல் இருந்தால் ஹாஷ் எங்கே, அவனுக்கு என்ன ஆச்சு என்று சமந்தாவிடம் இன்ஸ்டாகிராம் கமெண்ட்டில் கேட்பார்கள். புகைப்படத்தை அவர் போட்டவுடன், ஹாஷ் நன்றாக வளர்ந்து விட்டானே, லக்கி ஹாஷ் என்றெல்லாம் வியந்து அதற்கு தங்கள் வாழ்த்துகளையும் பதிவு செய்வார்கள்.

'யாராக இருந்தாலும் ஒரு மிருகத்தை நேசிக்கும் வரை, அவரின் ஆன்மாவின் ஒரு பகுதி விழித்திருக்காது’ என்று அண்மையில் ஹாஷ் புகைப்படத்துடன் இப்படியொரு செய்தியை வெளியிட்டிருந்தார் சமந்தா.

தனது இரண்டாம் திருமண நாள் கொண்டாட்டத்தில்கூட ஹாஷின் கழுத்துப் பட்டையில் ‘நெம்பர் 1 கணவன்’ என்று எழுதி கணவர் நாக சைதன்யாவிடம் தந்தார்.

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.

ஆனால் இதைப் பார்த்த சைதன்யா ரசிகர்கள் கோபம் அடைந்து, கணவரைப் பற்றி பொதுவெளியில் மரியாதையாக பேசுங்கள் என்று சாடினார்கள்.

அழகான பெண்கள் எது செய்தாலும் அது அழகுதான் என்று அவரது ரசிகர்கள் சமந்தாவை எப்போதும் கொண்டாடி வருகிறார்கள்.

தன்னுடைய வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கங்களை புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து வருகிறார் சமந்தா. அவ்வகையில் நேரடியாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் விரும்புகிறார்.

பொதுவாக திருமணத்துக்குப் பின் நடிகையின் திரை வாழ்க்கை அவ்வளவுதான் என்று சொல்பவர்களின் வார்த்தையைப் பொய்யாக்கியவர் சமந்தா.

திருமணத்துக்கு முன்னும் சரி, நாக சைதன்யாவுடன் திருமண வாழ்க்கையிலும் சரி தன்னுடைய வேலையையும் சொந்த வாழ்க்கையையும் அழகாக பேலன்ஸ் செய்கிறார் சாம்.

ரசிகர்களுக்குப் பிடித்த நடிகை, தமிழ் தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறார்.

நடிகை என்றால் க்ளாமர் ரோல்களில் ஹீரோவுடன் ஆடிப் பாடுபவர் என்பதை உடைத்து எறிந்து, நடிப்பதிலும், தன்னுடைய கதாபாத்திரத்துக்கு சிறிதேனும் முக்கியத்துவம் இருப்பதிலும்தான் என்பதை நிரூபித்தவர் சமந்தா. கதை பிடித்திருந்தால் மட்டுமே அதைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

தங்கம் - வெள்ளி விலை சற்று குறைவு!

பணம் பேசும் வசனங்கள்... காந்தி டாக்ஸ் - திரை விமர்சனம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT