pachai vilakku 
செய்திகள்

சிவாஜி நடித்த 'பச்சை விளக்கு' தலைப்பில் புதுப்படம் உருவாகிறது

சிவாஜி நடித்த 'பச்சை விளக்கு' தலைப்பில் புதுப்படம் உருவாகிறது. இப்படத்தை எழுதி இயக்கி நடிக்கிறார் டாக்டர் மாறன்.

ஜி. அசோக்

சிவாஜி நடித்த 'பச்சை விளக்கு' தலைப்பில் புதுப்படம் உருவாகிறது. இப்படத்தை எழுதி இயக்கி நடிக்கிறார் டாக்டர் மாறன்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை களமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. டாக்டர் மாறன் பேசும் போது, 'சாலை பாதுகாப்பு படிப்பில் பிஎச்டி முடித்திருக்கிறேன். சாலை விபத்து  தமிழகத்தில்தான் அதிகம். அதற்குக் காரணம் சாலை விதி மீறல்கள்தான். அதை எப்படித் தவிர்க்கலாம், அதே போல் வாழ்க்கையில் எல்லை மீறினால் என்னவாகும் என்பதை உணர்த்தும் கதையாக 'பச்சை விளக்கு' உருவாகியிருக்கிறது.

இதில் டிராபிக் வார்டன் வேடத்தை நான் ஏற்க தீஷா, தாரா, ரூபிகா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன், சிவசங்கர் நடித்திருக்கின்றனர். டாக்டர் மணிமேகலை தயாரிக்கிறார். தேவேந்திரன் இசை. எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு.

இப்படத்துக்கு சிவப்பு மஞ்சள் பச்சை, நில் கவனி செல் என டைட்டில்கள் யோசித்தேன். அந்த டைட்டில்கள் கிடைக்கவில்லை. இறுதியில் பச்சை விளக்கு என்ற தலைப்புக் கிடைத்தது. மகிழ்ச்சி. டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT