முகப்பு
செய்திகள்

ஒரே புகைப்படத்தில் விஜய் சேதுபதி & தீபிகா படுகோன்: காரணம் என்ன?

மும்பையில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் திரையுலகம் குறித்த விவாதம் நடைபெற்றது.

Updated On : 16 நவம்பர், 2019 at 12:47 PM
பகிர்:

சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. தீபிகா படுகோன், ஆலியா பட், ரன்வீர் சிங், அயுஷ்மண் குர்ரானா, விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, பார்வதி, மனோஜ் பாஜ்பாய் என இந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் ஒரே புகைப்படத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படாத ரசிகர்களே இருக்கமுடியாது. இதனால் இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. 

எதற்காக இந்தப் புகைப்படம், என்ன காரணத்துக்காக இவர்கள் ஒன்றிணைந்தார்கள் என்கிற கேள்வி உருவானது. மும்பையில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் திரையுலகம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் இந்தத் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு உரையாடியுள்ளார்கள். நிகழ்வுக்கு முன்பு இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.