செய்திகள்

மிக விரைவில் அரசியலுக்கு வருவேன்: உதயநிதி சர்ச்சையில் சிக்கிய நடிகை வீசிய அடுத்த பவுன்சர்

DIN

சென்னை: மிக விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலினை முன்வைத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை தெரிவித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் மீதான 'மீ டூ' புகார்களை  தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அவரது இந்தப் புகார் வரிசையில் தெலுங்கு திரையுலக நடிகர்கள் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீதும் கடுமையான புகார்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது இந்தப் புகார்களை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். 

திடீர் திருப்பமாக நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு கருத்து ஒன்று சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மிக விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று  நடிகை ஸ்ரீரெட்டி ரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ஆங்கில செய்த்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது;-

என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது.

எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. உதயநிதியை நான் இதுவரை நேரில் கூட பார்த்தது கிடையாது. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள்.

எனது பெயரில் ஃபேஸ்புக்கில் இருக்கும் போலியான கணக்குகள் குறித்து ஹைதராபாத்  காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கபபடவில்லை. எனவே என் பெயரை வைத்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்.  மிக விரைவில் நான் அரசியலுக்கு வருகிறேன். இதற்கு முன்னரும் ஆந்திராவில் எம்.பி தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நான் மறுத்துவிட்டேர்ன். சென்னையில் குடியேறவே நான் விரும்புகிறேன். இங்குள்ள ஏழை மக்களுக்கு சேவை செய்ய நன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT