இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணியின் ‘உன்னை நினைச்சு நினைச்சு’ பாடல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் குறித்து பலரும் பாராட்டி எழுதியவற்றிலிருந்து சில பதிவுகள்...
மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர்.
இளையராஜா இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய உன்னை நினைச்சு நினைச்சு பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணி மிகவும் புதுமையாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இப்பாடல் குறித்துச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் எழுதிய பதிவுகளின் தொகுப்பு: