முகப்பு
செய்திகள்

கோவா திரைப்பட விழா: கிரேஸி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திரையிடப்படும் ரஜினி படம்

மறைந்த 13 திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுடைய படங்கள் கோவா திரைப்பட விழாவில்...

Updated On : 20 நவம்பர், 2019 at 4:50 PM
பகிர்:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று முதல் 28-ம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவை இன்று தொடங்கிவைத்தார்கள்.  

இந்நிலையில் மறைந்த 13 திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுடைய படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. சமீபத்தில் மறைந்த வசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஜினி நடித்த அருணாச்சலம் படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.