Tom Hanks 
செய்திகள்

ஆஸ்கர் விருதுகளை வென்ற நடிகரின் வித்யாசமான பழக்கம்

இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்.

SIVA

இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். Big (1988), Philadelphia (1993), Forrest Gump (1994), Apollo 13 (1995), Saving Private Ryan, You‘ve Got Mail (1998), Cast Away (2000), The Da Vinci Code (2006), Captain Phillips, Saving Mr. Banks (2013) உள்பட பல படங்களில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். 

காஸ்ட் அவே (Cast Away) என்ற ஹாலிவுட் படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் டாம் ஹேங்ஸ். தபால் நிறுவனமொன்றின் அதிகாரியாக நோலண்ட் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய புகழைப் பெற்றார். அந்தப் படத்தில் வசதியான வாழ்க்கையை வாழும் நோலண்ட் விமான விபத்தில் சிக்கி, குடும்பத்தினரால் இறந்தவன் என்று கருதப்படுவான். ஆனால் அவன் ஒரு தீவில் கரையொதுங்கி எப்படியோ உயிர் பிழைத்திருப்பான். ஒரு மனிதன் கூட இல்லாத அந்தத் தனிமையான தீவில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளைக் கழித்தபின் மீட்கபடுவான். அதன் பின் அவன் குடும்பம் அவனை எப்படி ஏற்றது என்பதை விளக்கும் கதையே இந்தப் படம். தனது அற்புதமான நடிப்பாற்றலால் நோலண்ட் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார் டாம் ஹாங்க்ஸ். போலவே அவரது நடிப்பு வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான படம் ஃபாரஸ்ட் கம்ப்.  

சினிமா நட்சத்திரங்கள் நகை முதல் நாய்கள் வரை அனைத்தையும் சேகரிப்பவர்கள். டாம் ஹாங்க்ஸ் வித்யாசமான பொருட்களை விரும்பக் கூடிய ஓர் ஆபூர்வ சேகரிப்பாளர். இவர் வித்தியாசமாக, டைப்ரைட்டர்களைக் சேகரிக்கிறார். இது வரை 100-க்கும் அதிகமான டைப்ரைட்டர்களை சேகரித்துள்ளார். இவற்றை ஆய்வு செய்து, ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்ல; டைப்ரைட்டர்களை மையமாக வைத்து 17 சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT