செய்திகள்

தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் உலகப் பட விழாக்களில் பங்கேற்க தமிழக அரசு உதவும்! அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவிப்பு!

தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் உலகப் பட விழாக்களில் பங்கேற்க தமிழக அரசு உதவும் – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவிப்பு

ராஜ்மோகன்

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சுமார் 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும் 12000- த்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் சார்பில் Film Bazaar எனும் சினிமா சந்தை மூலம் இந்திய திரைப்பட படைப்பாளிகளை உலக படைப்பாளிகளுடன் இணைக்கும் நிகழ்வும்இவ்விழாவில் நடந்து வருகிறது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு திரைப்பட துறையில் பிரதிநிதியாக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்நாட்டில் படம்பிடிக்க வருமாறு உலக திரைப்பட படைப்பாளிகளுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்த வரும் அனைத்து படைப்பாளிகளுக்கும் ஒற்றை சாளர முறையில் படப்பிடிப்பு வசதிகளை செய்து தர அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது என்று உறுதி கூறிய அமைச்சர் தமிழ்நாடு அரசு திரைப்படதுறையினருக்கு செய்து வரும் சாதனைகளை பட்டியலிட்டார்.

  • சென்னை திரைப்பட விழாவிற்கு இவ்வாண்டு  ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னையை உலக திரைப்பட விழாக்களின் சந்தையாக மாற்றியுள்ளது.
  • விரைவில் Tamilnadu Film Facilitation மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவிலேயே முன் மாதிரி முயற்சியாக அரசு மூலம் ஆன்லைனில் திரைப்பட  டிக்கெட் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • புரட்சித்தலைவி அம்மாவின் பெயரில் சென்னைக்கு அருகே பையனூரில் பிரமாண்டமான திரைப்பட படப்பிடிப்பு தளம் தொடங்கப்பட்டுள்ளது
  • தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கும் மானியம் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.
  • இதே வளாகத்தில் அனைத்து திரைப்பட கலைஞர்களும் தங்குவதற்கு ஏதுவாக மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளும் தொடங்கியுள்ளன.
  • திரைப்பட துறையினருக்கு என சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்டிற்கு நிகராக மிகப் பெரிய திரைப்பட தளம் அமைக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
  • சென்னை அரசு திரைப்பட கல்லூரியில் ஏற்கனவே அனிமேஷன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நமது மாணவர்களும் படைப்பாளிகளும் உலக திரைப்படவிழாக்களில் தங்களின் படைப்புகளை கொண்டு சேர்க்க உதவியும் வழிகாட்டுதலும் செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்கள் உலகதிரைப்பட விழாக்களில் பங்கேற்க தமிழ அரசு உதவும் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து  தங்கள் படங்களை விழாவிற்கு கொண்டு வந்திருந்த சுயாதீன திரைப்பட படைப்பாளிகள சந்தித்த அமைச்சர் அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் தேசிய திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணி,  சென்னை மண்டல் இயக்குனர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், டாக்டர் ரமேஷ், தென்னிந்திய திரைப்பட சம்மேள செயலாளர் ரவி கோட்டாக்காரா, திரைப்பட இயக்குனர் இரா பார்த்திபன், லட்சுமி ராமகிருஷ்ணன். ஏவிஎம்சண்முகம்,  அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர்கள் வெங்கட், எம்எஸ்மகேஷ், நடிகை அனுபமா , நடிகர் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்பட துறை மாணவர்களும் திரைப்படத் துறையினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT