செய்திகள்

கார்த்தி நடித்துள்ள "கைதி" பட ட்ரைலர் வெளியீடு 

DIN


சென்னை: கார்த்தி நடித்துள்ள "கைதி" படத்தின் ட்ரைலர் ஆயுத பூஜை தினமான திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் கைதி படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் முதலில் டீசரானது மே மாதம் 31-ஆம் தேதி வெளியானது.  தற்போது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கதாநாயகி இல்லாத, முற்றிலும் இரவுக்காட்சிகளாக கொண்ட இப்படம் தீபாவளியன்று வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய படங்கள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT