செய்திகள்

வரி ஏய்ப்பு விவகாரம்: விஷால் மீதான வழக்கு நவ.11-க்கு ஒத்திவைப்பு

DIN

விஷால் மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கு, நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் நடிகா் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபா்களுக்கு வழங்கிய சம்பளத்துக்கு வரி பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகை சுமாா் ரூ.4 கோடியை நிறுவனத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் வருமான வரித் துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை என்று கூறி அவா் மீது வருமான வரித் துறை எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஹொ்மிஸ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகா் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானாா். விசாரணைக்குப் பின்னா், வழக்கை நவம்பா் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT