'மனசெல்லாம்' படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் வித்யாபாலன். ஆனால் அவருக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் இடம் கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த வித்யாபாலன், அஜித் ஜோடியாக 'நேர் கொண்ட பார்வை' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
தொடக்க காலத்தில் இவரது நடிப்பு பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கைப் படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து திரையுலகினரின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார். ஆனால் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தயாராக இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யத் தொடங்கினார். அதற்கு ஒருபுறம் வரவேற்பும் மற்றொருபுறம் விமர்சனங்களும் வந்தன.
விமரினங்களுக்கு பதிலடி தந்துள்ளார் வித்யாபாலன். அதில் அவர் "என்னை பிடிக்காதவர்கள் என் படத்தைப் பார்க்காதீர்கள். "டர்ட்டி பிக்சர்' மற்றும் "கஹானி' படங்களில் நடித்த பிறகு படங்களை எப்படித் தேர்வு செய்து நடிப்பது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எனக்குள்ள துணிச்சலால் நான் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறேன். சிலர் நான் தேர்வு செய்வதை விரும்புவார்கள், சிலர் விரும்பமாட்டார்கள். யாருக்கெல்லாம் விருப்பமில்லையோ அவர்கள் என் படத்தை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
- ஜி.அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.