முகப்பு
செய்திகள்

விஜய் - விஜய் சேதுபதி படத்தில் ஆண்ட்ரியா!

ஏராளமான நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 அக்டோபர், 2019 at 5:51 PM
பகிர்:

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. 

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் இந்தப் படக்குழுவில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார். ஏராளமான நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தில்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.