செய்திகள்

இந்த வாரம் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் இல்லை!

அடுத்த வாரம், நவம்பர் 8 அன்று துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது.

எழில்

கடந்த வாரம் தீபாவாளியை முன்னிட்டு, விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய இரு படங்கள் வெளியாகி, இரண்டு நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. இதில், பிகில் படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான்கு நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 75 கோடி வசூலை அள்ளியுள்ளது. 

இந்நிலையில் இந்த வாரம் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில், கைதி ஆகிய இரு படங்கள் திரையிடப்பட்டுள்ளன. மீதமுள்ள திரையரங்குகளில் அசுரன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த வாரம் புதிய படம் எதுவும் வெளியாகவிருந்தாலும் அதற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைப்பது கடினம். இந்நிலையில் இந்த வாரம் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் அடுத்த வாரம், நவம்பர் 8 அன்று துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது. ஆதித்ய வர்மா, மிக மிக அவசரம், பட்லர் பாலு, தவம், பேய் பிடிச்ச கதை ஆகிய தமிழ்ப் படங்கள் அடுத்த வாரம் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT