செய்திகள்

அம்மை கண்டவர்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ உணவு

முதலில் பச்சரிசியை நொய்யாக உடைத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

 
பச்சரிசி  வரகு கஞ்சி

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 100 கிராம்
கோதுமை - 10 கிராம்
பார்லி - 10 கிராம்
வரகு - 10 கிராம்
கேழ்வரகு - 10  கிராம்
சோளம் - 10 கிராம்
சிறிய வெங்காயம் - 25 கிராம்.

செய்முறை

முதலில் பச்சரிசியை நொய்யாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கோதுமை, பார்லி, வரகு, கேழ்வரகு, சோளம் இவற்றை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். (மிகவும் நைசாக அரைக்கக் கூடாது). கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் வெங்காயத்தைத் தவிர்த்து மற்ற பொருட்களைச் சேர்த்துக் கிளறி விட வேண்டும். கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள  வெங்காயத்தைப்  போட்டுக் கிளறி  மிதமான தீயில் வேகவிட்டு கஞ்சி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

இந்தக் கஞ்சியை மோர் சேர்த்தும் பருகலாம்.

பயன்கள்

இந்தக் கஞ்சி மிகவும் சுவையுள்ளதாகவும், சத்துள்ளதாகவும் இருப்பதால் அனைத்து வயதினரும் குடிக்கக் கூடிய கஞ்சி.

அம்மை  கண்டவர்கள் அருந்தக் கூடிய மிகவும் ஏற்றமருத்துவ குணம் நிறைந்து உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT