செய்திகள்

மற்றுமொரு ஹிந்தி பட ரீமேக்கில் அஜித்?

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். இதையடுத்து ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில்...

எழில்

சமீபத்தில் வெளியான ஆர்டிகிள் 15 ஹிந்திப் படம் அதிகக் கவனத்தைப் பெற்றதோடு இந்தியாவில் ரூ. 64 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது. 

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். இதையடுத்து ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தனுஷ் முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் போனி கபூருக்கு அந்த உரிமை கிடைத்துள்ளதால் நேர்கொண்ட பார்வை, வினோத் இயக்கும் புதிய படம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக போனி கபூரின் தயாரிப்பில், ஆர்டிகிள் 15 தமிழ்  ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT