செய்திகள்

அட, இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா? நடிகர்களின் சம்பளம் வரைமுறைப்படுத்தப்படுமா?

சினேகா

நடிகர்களின் மார்கெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டின் அடிப்படையில்தான் அவர்களுடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. கோலிவுட்டைப் பொருத்தவரையில் பின்வரும் சம்பளத்தை இந்த உச்ச நட்சத்திரங்கள் வாங்குகிறார்கள் என்று தகவல் அவ்வப்போது வெளிவரும். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - 70 கோடி
தளபதி - விஜய் 50 கோடி
'தல' அஜித் - 45 கோடி
உலக நாயகன் கமல்ஹாசன் - 35 கோடி
சூர்யா - 25 கோடி
சீயான் விக்ரம் - 18 கோடி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - 9 கோடி
தனுஷ் 9 கோடி
சிம்பு 9 கோடி
சிவகார்த்திகேயன் 5 கோடி

நடிகைகளைப் பொருத்தவரையில் அவர்கள் கதாநாயகனுக்கு பக்க துணையாக மட்டும் வந்து போகும் நிலையில் அவரவர் screen presence-க்கு ஏற்ற வகையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுள் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா  4 கோடி வாங்குகிறார். பெண் மையக் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பு உள்ளது.

ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதி நடிகர்களின் சம்பளத்துக்கே செல்வாகிவிடுகிறது என்று தயாரிப்பாளர்கள் பல காலமாக கூறிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய படம் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என்ற ஆசையில், அந்தந்த நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை முதலில் அட்வான்ஸாகவும், அதன் பின் full and final settlement-ஆகவும் தருவார்கள். வணிகரீதியாக படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னையில்லை, அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க தொடங்குவார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அபப்டம் தோல்வியைத் தழுவினால் நஷ்டத்துக்குள்ளாவர்கள். அப்போது பெரும் குறையாக அவர்கள் நினைப்பது ஹீரோவுக்குத் தந்த சம்பளம் வீணாகிவிட்டது என்றுதான்.

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோலிவுட்டைப் பொருத்தவரை ஹீரோவை மையப்படுத்திதான் பல ஆண்டுகளாக வியாபாரம் நடக்கிறது. கமர்ஷியல் ஃபிலிம் என்ற அடையாளத்துடன், மாஸ் நடிகர்களின் பங்களிப்புடன் ஒரு படம் திரைக்கு வருவதை சாதாரண ரசிகன் முதல் சானல்கள் வரை எதிர்ப்பார்க்கும் சூழல் முன்பு இருந்தது. ஆனால் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் இதுவே தொடர்ந்தால் திரையுலகம் மேலும் வீழ்ச்சிப் பாதைக்குத்தான் செல்லும் என்கிறார்கள் திரை ஆர்வலர்கள்.

இந்நிலையில்தான் நடிகர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார். இது திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்குமா அல்லது சுமுகமாக தீர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT