முகப்பு
செய்திகள்

இயக்குநராக அறிமுகமாகும் ப்ளூசட்டை மாறன்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ப்ளூசட்டை மாறன் இயக்குகிறார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:

ப்ளூசட்டை மாறனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. யூடியூபில் தமிழ்ப் படங்களுக்குக் காரசாரமாக விமரிசனங்கள் அளிப்பவர். இதனால் திரையுலகினரின் ஏராளமான எதிர்ப்புகளை அவர் சந்தித்துள்ளார். காவல்துறையினரிடம் அவருக்கு எதிராகப் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ப்ளூசட்டை மாறன் இயக்குநராக அறிமுகமாகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ப்ளூசட்டை மாறன் இயக்குகிறார். நரேன், ராதாரவி போன்றோருடன் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்கள்.

எல்லோரும் என்னை விமர்சனம் பண்ணத் தயாராக உள்ளார்கள். ஒரு நல்ல படம் என்று பாராட்டு வாங்கக்கூடிய படத்தையே நான் எடுக்கப்போகிறேன் என்று ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.