செய்திகள்

சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!

கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும்...

எழில்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும் அங்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்தில் ரூ. 22 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது 2.0 படம். இதேபோல கடந்த வருடம் மே மாதம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி 2 படம் சீனாவில் வெளியாகி, ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது. ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப் படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப் படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளன. கடந்த மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது. இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.

சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி) வசூலித்துள்ள இந்தியப் படங்கள்

2015: பிகே 
2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)  
2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)
2018: ஹிந்தி மீடியம்  
2018: பஜ்ரங்கி பைஜான்  
2018: ஹிச்கி 
2019: அந்தாதுன் 
2019: மாம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT