செய்திகள்

தர்பார் படப்பிடிப்புக் காட்சிகளை வெளியிட்டு மகிழ்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்!

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

Shakthivel

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு சம்பந்தமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்படத்தின் behind the screen காட்சிகளை வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகியது.

ரஜினி சாரிடமுள்ள அபாரமான வெளிச்சமும் அன்பும் அனைவரையும் சரிசமமாக எண்ணுகிறது. எவ்வித பாகுபாகும் இன்றி அனைவரையும் பொறுமையாக, மரியாதையாக நடத்துகிறார் என்று இதற்கு சில நாட்கள் முன்பு இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் செய்திருந்தார். ஒரு ட்வீட்டுக்கான பதிலில், ஒரு பாடலில் ரஜினியும் நயன்தாராவும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சிதான் அப்பாடலின் சிறப்பே. பாடலின் இறுதிக்காட்சி அது. பிருந்தா அருமையாக நடனம் அமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT