முகப்பு
செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பிகில் படப் பாடல்கள் வெளியீடு!

ரஹ்மான் இசையமைப்பில் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன.

Updated On : 20 செப்டம்பர், 2019 at 10:51 AM
பகிர்:

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

ரஹ்மான் இசையமைப்பில் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.