செய்திகள்

கரோனா குறும்படத்தில் நடித்துள்ள அமிதாப், ரஜினி: இன்று ஒளிபரப்பு!

DIN

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு பற்றிய குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஃபேமிலி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் கரோனா பற்றிய விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினி காந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் போன்றோர் நடிக்க முன்வந்துள்ளார்கள்.

ஊரடங்குக் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட கரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை இந்தக் குறும்படம் அளிக்கவுள்ளது. இன்றிரவு 9 மணிக்கு சோனி தொலைக்காட்சியில் ஃபேமிலி குறும்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT