முகப்பு
செய்திகள்

தைரியமாக இருப்பது போல நடிக்க வேண்டாம்; கரோனாவை எண்ணி அச்சம் கொள்க: சல்மான் கான் அறிவுரை

ஊரடங்கு அமலில் இருக்கும் இச்சமயத்தில் அனைவரும் வீட்டினுள் இருக்கவேண்டும், கரோனாவை எண்ணி அச்சப்படுங்கள் என பிரபல நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

ஊரடங்கு அமலில் இருக்கும் இச்சமயத்தில் அனைவரும் வீட்டினுள் இருக்கவேண்டும், கரோனாவை எண்ணி அச்சப்படுங்கள் என பிரபல நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் சல்மான் கான் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஷோலே படத்தில் வருகிற, அச்சம் கொள்பவன் இறப்பான் என்கிற வசனம் தற்போதைய நிலைமைக்கு சரிவராது. நம்முடைய அச்சத்தைத் தைரியத்துடன் வெளிப்படுத்தவேண்டும். கரோனாவை எண்ணி பயப்படாமல் தைரியமாக இருப்பது போல நடிக்கவேண்டாம். யார் யாரெல்லாம் அச்சப்பட்டு வீட்டினுள் இருக்கிறார்களோ அவர்கள் தங்களையும் இந்த சமூகத்தையும் காக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →