முகப்பு
செய்திகள்

திரைத்துறையிலிருந்து விலகலா?: வதந்தி பரப்பிய மும்பை ஊடகத்துக்கு நடிகர் விக்ரம் தரப்பு கண்டனம்

திரைத்துறையிலிருந்து விலகுவதாக நடிகர் விக்ரம் முடிவெடுத்துள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

திரைத்துறையிலிருந்து விலகுவதாக நடிகர் விக்ரம் முடிவெடுத்துள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மும்பை ஊடகம் வெளியிட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற விக்ரம் நடிப்புக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

வைரஸ் தொற்று பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள இச்சமயத்தில் இதுபோன்ற தவறான செய்தியை வெளியிடுவது பொறுப்பற்றத்தனம். தென்னிந்திய சினிமா குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல் எழுதப்பட்ட செய்தி என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →