முகப்பு
செய்திகள்

வெள்ளியன்று இணையத்தில் வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படம்!

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம் ஓ மை கடவுளே...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம் ஓ மை கடவுளே.

அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படம் வரும் வெள்ளியன்று (ஏப்ரல் 24) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான தர்பார், பட்டாஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தாராள பிரபு போன்ற படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியான நிலையில் ஓ மை கடவுளே மட்டும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது இணையத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோக் செல்வனும் ட்விட்டரில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஓ மை கடவுளே, பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் புதிய படங்களும் வெளிவரவில்லை. ரசிகர்கள் தொலைக்காட்சியிலும் அமேஸான், நெட்பிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களிலும் புதிய படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →