முகப்பு
செய்திகள்

டிக் டாக்கில் களமிறங்கி ரசிகர்களைக் குஷிப்படுத்தும் நடிகை த்ரிஷா

ரசிகர்களுக்காக டிக் டாக் தளத்தில் களமிறங்கி விடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை த்ரிஷா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்காக டிக் டாக் தளத்தில் களமிறங்கி விடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை த்ரிஷா.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தினால், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை த்ரிஷா, டிக்டாக் தளத்தில் களமிறங்கி ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார். ஆங்கிலப் பாடல்களுக்கு நடனமாடும் விடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். த்ரிஷாவின் விடியோக்களுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

@trishakrishnan

Clearly I miss the camera

முழு கட்டுரையைப் படிக்க →