செய்திகள்

அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள ஜோதிகா படம்!

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 24,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோதிகா நடித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு - ராம்ஜி, படத்தொகுப்பு - ரூபன்.

திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT