செய்திகள்

தாய் சங்கத்தை உடைக்கவில்லை: புதிய தயாரிப்பாளர் சங்கம் குறித்து பாரதிராஜா விளக்கம்

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார் மூத்த இயக்குநர் பாரதிராஜா.

DIN

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார் மூத்த இயக்குநர் பாரதிராஜா.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாரதிராஜா கூறியதாவது:

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றுக்கும் பதில் தேடுவது முக்கியம். 

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. 

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையுலகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. கையைப் பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT