முகப்பு
செய்திகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்ரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவல்

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி : சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட், 2020 at 1:15 PM
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி : சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகிர்:

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி : சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி : சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக திங்கள் மாலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், ‘சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த ஆர்.சி.கூப்பர் நகராட்சி மருத்துவமனையின் ஐந்து மருத்துவர்களை, சிபிஐ விசாரணை செய்வது பயன்தருவதாக இருக்கும். சுஷாந்த் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியரின் கூற்றுப்படி, சுஷாந்தின் கணுக்காலுக்கு கீழுள்ள பாதம் முறிந்ததைப் போன்று திருகப்பட்டிருந்தது என்று தெரிகிறது. உண்மைகள் வெளிவருகிறது!!’ என்று தெரிவித்துள்ளார்.

சுவாமியின் பதிவையடுத்து சுஷாந்த் மரணம் தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.