முகப்பு
செய்திகள்

தி மாஸ்க் ஆஃப் ஸோரோ கதாநாயகனுக்கு கரோனா

தனது 60-வது பிறந்த நாளன்று இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

தி மாஸ்க் ஆஃப் ஸோரோ படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற ஆன்டோனியோ பாண்டரஸ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது 60-வது பிறந்த நாளன்று இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன். இதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நலமாகவே உள்ளேன். சிறிது சோர்வாக உள்ளது. ஆனால் விரைவில் குணமடைவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தக் காலத்தைப் படிக்கவும் ஓய்வு எடுக்கவும் பயன்படுத்திக் கொள்வேன். என் 60 வருட வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் திட்டமிட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். 

பெயின் அண்ட் குளோரி படத்துக்காகக் கடந்த வருடம் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஆன்டோனியோ வென்றார். டெஸ்பரடோ (1995), மாஸ்க் ஆஃப் ஸோரோ (1998), ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெக்ஸிகோ (2003) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →