செய்திகள்

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்...

IANS

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் தத்துக்குக் கடந்த சனிக்கிழமை மாலை மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் 61 வயது சஞ்சய் தத்.

பிறகு கடந்த திங்கள் அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். 

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட நிபுணர் கோமல் நடா ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: 

நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார் சஞ்சய் தத். இதுகுறித்து சஞ்சய் தத் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

மருத்துவச் சிகிச்சைக்காக எனது பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் என் குடும்பத்தினரும் நண்பர்களும் உள்ளார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாமல் ஊகிக்க வேண்டாம். உங்களுடைய வாழ்த்துகளால் விரைவில் நான் பணிக்குத் திரும்புவேன் என்று கூறியுள்ளார். 

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சஞ்சய் தத் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT