செய்திகள்

தொலைபேசி எண்ணைத் தவறாக வெளியிட்ட தொலைக்காட்சிகள்: சுசாந்த் சிங் காதலி ரியாவால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்!

சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி எண் இதுதான் என ஒரு தகவலைச் சமீபத்தில்...

DIN

சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி எண் இதுதான் என ஒரு தகவலைச் சமீபத்தில் சில தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இதனால் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் சுசாந்த் சிங்கைத் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமான விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி, நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது தாயாா் சந்தியா சக்ரவா்த்தி, தந்தை இந்திரஜித் சக்ரவா்த்தி, சகோதரா் ஷோயிக் உள்ளிட்ட சில நபா்கள் மீது சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், பாட்னா போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளார் ரியா. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி இதுதான் என்று கூறி ஒரு தொலைபேசி எண்ணைச் சில தொலைக்காட்சிகள் சமீபத்தில் வெளியிட்டன. ஆனால் அந்தத் தொலைபேசி எண் மஹாராஷ்டிரத்தின் தானே பகுதியைச் சேர்ந்த சாகர் என்பவரின் தொலைபேசி எண்ணாகும். 

தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட தொலைபேசி எண்ணை ரியாவினுடையது என்றெண்ணி பலரும் சாகரின் எண்ணுக்கு போன் செய்து அவரைக் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்கள். நூற்றுக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளால் மிகுந்த தொல்லையும் மன உளைச்சலுக்கும் ஆளான சாகர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பிறகு, தன்னைத் துன்புறுத்திய நூற்றுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை பிளாக் செய்துள்ளார். இந்தப் பிரச்னை ஆரம்பித்ததிலிருந்து சமூகவலைத்தளங்களை அவர் பயன்படுத்துவதில்லை. காவல்துறையினரின் அறிவுரையின்படி தன்னுடைய தொலைபேசியை அணைத்துவிட்டு நண்பரின் தொலைபேசியைப் பயன்படுத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT