செய்திகள்

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும்: விடியோ வெளியிட்ட ரஜினி

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி...

DIN

பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என ரஜினி கூறியுள்ளார். 

சமீபத்தில், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

பிறகு, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. 

இதனால் உலகமெங்கிலும் உள்ள எஸ்.பி.பி. ரசிகர்கள் கவலையடைந்தார்கள். சமூகவலைத்தளங்களில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்பட திரையுலகப் பிரபலங்களும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை விடியோவாகவும் ட்வீட்டாகவும் வெளியிட்டார்கள். 

இந்நிலையில் எஸ்.பி.பி.க்காக விடியோ ஒன்றை ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு சிறப்பு ரயில்

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் காரணமாக அவசர வழக்குகளை கையாள 6 போ் குழு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்!

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT