செய்திகள்

சுசாந்த் சிங் வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளையே பிகார் அரசு மேற்கொண்டது: நிதீஷ் குமார்

DIN

பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளையே பிகார் அரசு மேற்கொண்டது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பேட்டியளித்துள்ளார்.

சுசாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். இந்த வழக்கை மும்பை போலீஸாா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பிகாா் தலைநகா் பாட்னாவில் சுசாந்த் சிங்கின் தந்தை புகாா் அளித்திருந்தாா்.

சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.15 கோடி பணத்தை ரியாவின் குடும்பத்தினா் தவறாகக் கையாண்டதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். இதன் அடிப்படையில் பண பரிவா்த்தனை மோசடி வழக்கை அமலாக்கத் துறையினா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாட்னா போலீஸாா் விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்து சிலரை குற்றம்சாட்டப்பட்டவா்களாக சோ்த்துள்ளது.

சுசாந்த் சிங் தற்கொலை தொடா்பாக பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்திருந்தாா். 

இந்நிலையில் ரியா மனு மீது தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. பிகாரில் பதிவு செய்யப்பட்ட சுசாந்த் சிங் மரண வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய ரியாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுசாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பேட்டியளித்ததாவது:

பிகார் அரசு அரசியல் சாசனப்படி, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்தது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நிரூபணமாகியுள்ளது.

இது எங்களின் வெற்றியல்ல. நீதிக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் சாசனப்படி நடந்துகொண்டோம், இந்த முடிவுக்குப் பிறகு சுசாந்த் சிங்கின் குடும்பத்துக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT