முகப்பு
செய்திகள்

கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய நயன்தாரா & விக்னேஷ் சிவன் (படங்கள்)

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றுள்ளதாக...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

திரையுலகப் பிரபலங்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்கள்.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என சமீபத்தில் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் இணைந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடியதன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →