படம் - instagram.com/divyabhatnagarofficial/ 
செய்திகள்

கரோனாவுக்குப் பலியான தொலைக்காட்சி நடிகை

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயது தொலைக்காட்சி நடிகை திவ்யா...

DIN

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயது தொலைக்காட்சி நடிகை திவ்யா பட்னாகர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகை திவ்யா பட்னாகர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். நவம்பர் இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டா் கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 29 அன்று இன்ஸ்டகிராமில் திவ்யா கூறியதாவது: என் இன்ஸ்டகிராம் குடும்பத்தினருக்கு... நான் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 

திவ்யாவின் மறைவுக்குச் சக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT