செய்திகள்

ஆசியப் பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்

DIN

லண்டன் நாளிதழ் வெளியிட்டுள்ள ஆசியப் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார். 

கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகள், அதன் அனுபவங்களின் தொகுப்பாக, புத்தகம் ஒன்றையும் அவர் எழுதி வருகிறார்.

இந்நிலையில் நெ.1 ஆசியப் பிரபலமாக சோனு சூட் தேர்வாகியுள்ளார். லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்கிற நாளிதழ் வெளியிட்டுள்ள உலகின் 50 ஆசியப் பிரபலங்களின் பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார். கரோனா காலத்தில் பல்வேறு உதவிகள் செய்ததால் இந்தப் பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான லில்லி சிங்குக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. நடிகர் தேவ் படேலுக்கு 4-வது இடமும் இந்தியப் பாடகர் அர்மான் மாலிக்குக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளன. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 6-வது இடமும் நடிகர் பிரபாஸுக்கு 7-ம் இடமும் கிடைத்துள்ளன. இந்தப் பட்டியலில் இளையவராக நெட்பிளிக்ஸ் இணையத் தொடரில் நடித்த மைத்ரேயி ராமகிருஷ்ணனும் (22-வது இடம்) மூத்தவராக அமிதாப் பச்சனும் (20-வது இடம்) உள்ளார்கள். 

பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட் கூறியதாவது: கரோனா பரவலின்போது எனது நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என உடனே தோன்றியது. இது என் கடமை. இதற்காகத்தான் நான் மும்பைக்கு வந்தேன். மக்களின் வாழ்த்துகள் ஏராளமாக எனக்குக் கிடைத்தன. இப்பணிகளை என் இறுதி மூச்சு வரை நிறுத்த மாட்டேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT