செய்திகள்

என்னிடம் ஸ்மார்ட்போன் கிடையாது: ஆச்சர்யப்படுத்தும் கிறிஸ்டோபர் நோலன்

DIN

தன்னிடம் ஸ்மார்ட்போன் கிடையாது என பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், டெனெட் என்கிற படத்தைச் சமீபத்தில் இயக்கினார். மெமண்டோ, தி டார்க் நைட், இன்சப்சன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் நோலன் கூறியதாவது:

உண்மைதான். என்னிடம் ஸ்மார்ட்போன் கிடையாது. என்னிடம் சிறிய ஃபிளிப் போன் உள்ளது. தேவைப்படும்போது அதை எடுத்துச் செல்வேன். நான் கவனத்தைச் சுலபமாகச் சிதறவிடுவேன். அதனால் சும்மா இருக்கும்போதும் எனக்கு இணையத் தொடர்பு தேவையில்லை. அத்தருணங்களில் மக்கள் இணையத்தில் மும்முரமாக இருக்கும்போது நான் யோசிப்பதற்காக நேரத்தைச் செலவிடுவேன். எனவே இது எனக்கு உதவுகிறது. 

நான் பணியாற்றும்போது என்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமும் செல்போன் உள்ளது. நான் ஒளிய முடியாது. நான் பணியாற்றும்போது என்னைச் சுலபமாக அணுக முடியும். இணையம் வழியாக மக்களுடன் தொடர்பில் இருப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. தரைவழித் தொலைபேசி வழியாகப் பேசிவிடுவேன். ஒவ்வொருவரும் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதற்கும் காரியங்கள் முடிப்பதற்கும் தனி வழியைத் தேடிக் கொள்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT