காட்டேரி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன?
கரோனா 2-ம் அலை பரவி வருவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு...
டீகே இயக்கியுள்ள காட்டேரி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே, அடுத்ததாக காட்டேரி என்கிற படத்தை இயக்கியுள்ளார். வைபவ், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, வரலக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருந்தது.
இந்நிலையில் காட்டேரி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்ததாவது:
கரோனா 2-ம் அலை பரவி வருவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. டிசம்பர் 25 அன்று வெளியாகவிருந்த காட்டேரி படத்தின் வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கிறோம். கரோனா தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.