முகப்பு
செய்திகள்

சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய்: முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான்.

Updated On : 25 டிசம்பர், 2020 at 5:16 PM
பகிர்:

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ், அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய் என்கிற படத்தை இயக்குகிறார்.

சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டார்.

Advertisement

சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி வேடங்களில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் சசிகுமார் நடிக்கவுள்ளார். வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் கதிரேசனின் ஃபைவ்ஸ்டார் கிரியேசன்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.