செய்திகள்

மாஸ்டர் படத்தின் வெளியீடு குறித்து நாளை அறிவிப்பு: தயாரிப்பு நிறுவனம்

படத்தின் வெளியீடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

DIN

மாஸ்டர் படத்தின் முக்கியமான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்தார். 

மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை (தற்போது 50%) அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றார்.  

இந்நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. நாளை மதியம் 12.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கியேட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT