முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார்.
மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை (தற்போது 50%) அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றார்.