செய்திகள்

திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை (தற்போது 50%) அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. விஜய், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றார்.  

இந்நிலையில் மாஸ்டர் படம், ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT