செய்திகள்

மிகப் பெரிய உதவி இது: இயக்குநரைப் பாராட்டிய தயாரிப்பாளர்

IANS

மார்ச் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இர்ஃபான் கானின் "ஆங்ரேஸி மீடியம்" என்ற படம் இப்போது ஒரு வாரத்திற்கு முன்பு மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, இர்ஃபானை வெள்ளித்திரையில் மீண்டும் பார்க்க உற்சாகப்படுத்தியது.

இந்த மாற்றம் குறித்த செய்தியை தயாரிப்பாளர் தினேஷ் விஜன் உறுதிப்படுத்தினார்: 'ஆங்ரேஸி மீடியம்' படப்பிடிப்பு சமயத்தில், துரதிர்ஷ்டவசமாக இர்ஃபானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றதால் படப்படிப்பு தாமதமாகியது.

"ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பாலிவுட்டில் பலர் எங்களுக்கு பக்கபலமாக அணி திரண்டுள்ளனர். கரண் ஜோஹர் நிபந்தனையற்ற நட்புறவைக் காட்டியுள்ளார், மேலும் அவரது படமான 'குஞ்சன் சக்சேனா' வெளியீட்டு தேதியை மாற்றிக் கொள்வதன் மூலமும், ஏப்ரல் மாதத்தில் எனது 'ரூஹி அஃப்ஸா' வெளியீட்டு தேதியை எடுத்துக் கொண்டதன் மூலமும் மிகப் பெரிய உதவியைச் செய்துள்ளார். இந்தத் துறையில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதைப் பார்ப்பது மனது நெகிழ்ச்சியடைகிறது. எனது மனமார்ந்த நன்றி. எதிர்காலத்தில் நாம் செழித்து வளருவதற்கான நேர்மறையான மாற்றத்தை இது உறுதி செய்கிறது என்பதை நான் அறிவேன். மார்ச் 13 அன்று, 'ஆங்ரேஸி மீடியம்' வெளியாகும், மற்றும் ஜூன் 5, 2020 அன்று 'ரூஹி- அப்சானா' வெளிவரும். " என்றார்.

"ஆங்ரேஸி மீடியம்", படத்தில் தந்தை, இர்ஃபான் கானுக்கும் மகள் ராதிகா மதனுக்கும் இடையே உள்ள அழகான உறவைப் பற்றியது.

ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இந்தப்படத்தில் இர்ஃபான் கான், கரீனா கபூர் கான், டிம்பிள் கபாடியா, பங்கஜ் திரிபாதி, தீபக் டோப்ரியல், ரன்வீர் ஷோரே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT